அமெரிக்காவில் நடனத்தில் இணைந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இசை திருவிழாதான் Coachella என்ற இசை நிகழ்ச்சி. இந்த ஆண்டும் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் உலகின் முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவனும் நயனும் இந்த விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களோடு ரசிகர்களாக நடனமாடி உற்சாக வெள்ளத்தில் இருப்பது இந்த புகைப்படங்களில் இருந்து தெரிய வருகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com