மருத்துவர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த விக்கி-நயன் ஜோடி!

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் மாலை 5 மணிக்கு தங்கள் வீட்டின் முன் வெளி வந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்களுக்கும், நர்சுகளுக்கு மருத்துவ ஊழியர்களும் நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த கைதட்டல் ஓசை பெரும் எழுச்சி ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் பல திரையுலக பிரமுகர்கள் தங்கள் வீடுகளின் முன் வெளியே வந்த கைதட்டி நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோலிவுட் திரையுலகில் காதல் ஜோடியான நயன்தாரா மற்றும் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் டாக்டர்களுக்கு கைதட்டி தங்கள் நன்றியை தெரிவித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இதுகுறித்து விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இன்றைய சூழ்நிலையில் டாக்டர்கள், காவல்துறையினர், மற்றும் அனைத்து பப்ளிக் ஊழியர்களும் சுகாதார ஊழியர்களும் தான் ரியல் ஹீரோக்கள். அவர்களுக்கு நாம் இணைந்து நன்றி தெரிவிப்போம்.

அனைவரும் இணைந்து செயல்பட்டால் கொரோனாவை அடித்து விரட்டி விடலாம். கொரோனாவுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மனித குலத்தையே அழித்து கொண்டிருக்கும் கொரோனாவை விரட்டியடித்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவோம். அதுவரை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவுக்கு சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது