'நாயகன்' கமல் மகளாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான ’பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கார்த்திகா. அதன் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’நாயகன்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை கார்த்திகா கடந்த 1988 ஆம் ஆண்டு சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை கார்த்திகா கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments