ரஜினியின் 'பேட்ட' குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன

இந்த நிலையில் நேற்று முன் தினம் 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் வெளியானது. நேற்று விஜய்சேதுபதியின் கேரக்டர் 'ஜித்து' என கெத்தாக வெளிவந்தது. இந்த நிலையில் இன்று இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நவாசுதின் சித்திக், சிங்கார் சிங்' என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவரது புதிய ஸ்டில் ஒன்றையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது

'பேட்ட' படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் வரும் 9ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது என்பதும், இந்த விழா சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நடிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

முன்னாள் உலக அழகியும், விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவருமான நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது காதலர் நிக்கி ஜோன்ஸ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்

'சர்வம் தாளமயம்' 2வது சிங்கிளை வெளியிடும் சர்வதேச பிரபலம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த அடுத்த படமான 'துப்பாக்கி முனை' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதமே சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு

இரும்பு பெண்மணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: விஷால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு இதே டிசம்பர் 5ஆம் தேதிதான் காலமானார். அவருடைய இரண்டாவது நினைவு தினத்தை அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.

பிரபல எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவும், பல நூல்கள் எழுதிய எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சற்றுமுன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.