விவாகரத்து முடிவெடுத்த 'பேட்ட' நடிகரை மனைவியுடன் சேர்த்து வைத்த கொரோனா!

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அவர்களை மீண்டும் இணைத்து வைத்துள்ள தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவருக்கும் இவருடைய மனைவி ஆலியா என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்த விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நவாசுதீன் சித்திக் மனைவி ஆலியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய குழந்தைகள் அவருடன் இருக்க முடியாத நிலையில் நவாசுதீன் சித்திக் குழந்தைகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டார். அதுமட்டுமின்றி ஆலியாவையும் அவர் கவனித்துக் கொண்டார்.

இதனால் மனம் மாறிய ஆலியா மீண்டும் கணவர் நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து வாழ முடிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறியபோது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது குழந்தைகளுடன் என்னால் இருக்க முடியவில்லை. அப்போது அவர் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொண்டதுடன் என்னையும் கவனித்துக் கொண்டார். ஒரு நல்ல தந்தை, நல்ல கணவர் என அவருடைய இன்னொரு பக்கத்தை முதன்முதலாகப் பார்த்தேன். இதனை அடுத்து நான் பழைய சம்பவங்களை மறந்து விட்டு மீண்டும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.