சொந்தமாக வடிவமைத்த புது பங்களா… அப்பா பாசத்தால் நெகிழ வைத்த “பேட்ட“ நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும் நவாசுதீன் சித்திக் பழைய பங்களா வடிவிலான வீடு ஒன்றை கட்டியுள்ளார். கடந்த 3 வருடங்களாக தானே உருவாக்கிய இந்த வீட்டிற்கு அவர் “நவாப்“ என்று தனது அப்பா பெயர் வைத்திருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை தந்திருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019இல் வெளியான திரைப்படம் “பேட்ட“. இதில் வில்லனாக நடித்து பட்டையைக் கிளப்பியவர்தான் நவாசுதீன். பாலிவுட் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துவரும் இவர் இந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகராகவே இருந்துவருகிறார்.
இவர் சமீபத்தில் தன்னுடைய புது வீடு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பழைய கிராமத்து வீட்டைப் பார்த்து ஈர்க்கப்பட்ட நடிகர் நவாசுதீன் தானே கடந்த 3 வருடங்களாக தன்னுடைய வீட்டிற்கு இண்டீரியர் டிசைன் குறித்த அனைத்து நுணுக்கமான வடிவமைப்புகளையும் செய்திருக்கிறார். மேலும் அப்பா மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கும் அவர் தனது புது வீட்டிற்கு “நவாப்“ என்று பெயர் வைத்திருக்கிறார். இவருடைய இந்தச் செயலைப் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தனது கனவு இல்லம் குறித்து பேசிய நவாசுதீன் இந்த வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய கிராமத்து வீடுதான் எனக்கு நினைக்கு வரவேண்டும். இதற்காகவே நான் சிறப்பாக வடிவமைத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத்துடன் இணைந்து “டிக் வெட்ஸ் ஷெரு“ எனும் படத்தில் நடித்து முடித்துள்ள நாவசுதீன் தொடர்ந்து “ஹீரோபந்தி 2“ எனும் படத்திலும் இணைந்து நடித்துவருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout