ரஜினியின் அடுத்த படத்தில் மீண்டும் பாலிவுட் வில்லன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நானா படேகர் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அதேபோல் ரஜினி நடித்து முடித்துள்ள '2.0' படத்திலும் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'ரஜினி 165' படத்திலும் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடித்து வரும் தகவல் வெளிவந்துள்ளது
இந்த படத்தில் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடித்து வருவதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கிய வேடம் என்று நஸ்ருதின் குறிப்பிட்டிருந்தாலும் அவர் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments