ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா உள்பட ஒருசில பிரபல நட்சத்திரங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் நவாஜூதீன் சித்திக். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சித்திக் இந்த படத்தில் இணைந்திருப்பது இந்த படத்தின் வட இந்திய வியாபாரத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.