அட்லீஸ்ட் விக்கிபீடியாவை பார்க்க கூடாதா? நவ்யா நாயர் வீட்டில் குழப்பம் ஏற்படுத்திய நிகழ்ச்சி..!

  • IndiaGlitz, [Friday,May 03 2024]

நடிகை நவ்யா நாயர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்றால் என்னை பற்றிய விவரங்களை என்னிடமே கேட்டிருக்கலாம், குறைந்தபட்சம் விக்கிபீடியாவை பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் தமிழில் ’அழகிய தீயே’ ’சிதம்பரம் ஒரு அப்பாசாமி’ ’பாசக்கிளிகள்’ ’மாயக்கண்ணாடி’ ’சில நேரங்களில் ’உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் கையேட்டில் அவரை பற்றி தவறாக சில விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிவித்துளார். எனக்கு ஒரு மகன் மட்டுமே இருக்கும் நிலையில் எனக்கு மகள் இருப்பதாகவும் அவரது மகள் பெயர் யாமிகா என்று குறிப்பிட்டுள்ளதாக வீடியோவில் நவ்யா நாயர் கூறியுள்ளார்.

என்னுடைய மகன் என்னிடம் என் சகோதரி எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ள நவ்யா நாயர் ஒருவரை விழாவிற்கு அழைக்கும் போது அவரது விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் கேட்டு வாங்கி இருக்கலாம், குறைந்தபட்சம் விக்கிபீடியாவை பார்த்து விவரங்களை தெரிவித்துக் கொண்டிருக்கலாம், இது என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை என்று கிண்டலாக கூறியுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அரசியலுக்கு வருகிறாரா ஜோதிகா? ஏன் ஓட்டு போடவில்லை.. அவரே அளித்த விளக்கம்.!

நடிகை ஜோதிகாவிடம் ஏன் ஓட்டு போடவில்லை என்றும் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

விஜயகாந்த் நினைவிடம் சென்ற இடத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி.. நடமாடும் கர்ணனாக  மாறிய கேபிஒய் பாலா..!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அவ்வப்போது பொதுமக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சென்னையில்

கட்டாந்தரையில் படுத்து கொண்டே பாரதியார் கவிதை.. ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டாந்தரையில் படுத்து கொண்டே பாரதியார் கவிதை படிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் கவின்? அவரே சொன்ன தகவல் என்ன தெரியுமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது.

ஜோதிகாவின் புதிய படம் உள்பட இன்று ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் ஜோதிகாவின் படம் உள்பட என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்ப்போம்.