பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சித்துவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
- IndiaGlitz, [Saturday,February 16 2019]
காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இன்னொரு சர்ஜிக்கல் அட்டாக் வேண்டும் என சமூக வலைத்தள பயனாளிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முன்னால் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து, 'ஒரு தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த நாட்டின் மீதும் பழிபோடுவது சரியாகாது. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் நன்மையும், தீமையும் கலந்துதான் இருக்கும். அதில் தீமை அழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதற்காக தனிநபரையோ அல்லது ஒரு நாட்டின் மீதோ குற்றம்சாட்டுவது சரியாகாது என்றார்.
சித்துவின் இந்த கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கபில்ஷர்மா நடத்தி வரும் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் இதுவரை கலந்து கொண்டிருந்த சித்து, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அர்ச்சனா சிங் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.. சித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால்தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.