உலகின் முதல் 4K HDR டிரைலரை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
'மூடர் கூடம்' படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் நடித்து இயக்கியிருக்கும் அடுத்த படமான 'அலாவுதினின் அற்புத விளக்கு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. உலகின் முதல் 4K HDR டிரைலரான இதனை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'இந்த வாழ்க்கையில ஏதாவது அதிசயம் நிகழ்ந்திராதா? என்ற ஏக்கத்தில் நம்ம எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் டிரைலர் உண்மையில் 4K HDR தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாகத்தான் உள்ளது. அலாவுதினிடம் கிடைத்த அற்புத விளக்கு போல் இந்த படத்தின் ஹீரோ நவீனிடம் இருக்கும் அற்புத கேமிராவும் அதன் பயனும் விளைவுகளும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் தான் இந்த படத்தின் கதை. ஆக்சன், த்ரில் கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.
நவீன், கயல் ஆனந்தி, எஸ்.நந்தகோபால் உள்பட் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். பாட்ஷா ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com