1 வயது குழந்தையை படுகொலை செய்த தாய்- ரயில் முன்பாய்ந்து தற்கொலை!

  • IndiaGlitz, [Monday,February 08 2021]

மும்பை பகுதியில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்ததோடு தானும் ரயில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையின் நவி பகுதி அருகே ரயிலில் சென்று கொண்டு இருந்த 30 வயது பெண் ஒருவர் ரயிலில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் வைத்து இருந்த பையில் இருந்து, தலைத் துண்டிக்கப்பட்ட ஒரு வயது குழந்தையின் உடலும் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய இளம் தான் பெற்ற குழந்தையையே தலையை துண்டித்து படுகொலை செய்து உள்ளார்.

அந்த உடலை பையில் எடுத்துக் கொண்டு ரயிலில் மும்பைக்கு வந்த அவர் திடீரென ஓடிக் கொண்டு இருந்த ரயிலில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் வாஷிகிரீக் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. உடல் மீட்கப்பட்ட அந்த இடத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட குழந்தையின் உடலும் கண்டுக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் பெற்ற தாயே தன் குழந்தையையே எதற்கு கொலை செய்து இருப்பார்? ஒருவேளை அப்பெண் மனநலம் பாதிகப்பட்டவரா? என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.