இரண்டாவது திருமணமா? 'கலக்க போவது யாரு' நவீன் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாகவும், அவரது முதல் மனைவி காவல்துறையினர்களுடன் சென்று அந்த திருமணத்தை நிறுத்தியதாகவும் சில நாட்களுக்கு செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து முதல் மனைவி திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நவீன் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்த பிரச்சனை குறித்து பலர் உண்மை என்ன என்பதை அறியாமல் கருத்துக்களை கூறி வருவதாகவும், தன்னை விமர்சனம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு முதல் திருமணம் நடந்ததாக கூறப்படும் பிரச்சனையில் உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்கும் என்னை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்றும், எனவே உண்மை என்ன என்பதை ஆராய்ந்து விமர்சனம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சனையை தற்போது காவல்துறையினர் சரியாக விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும், தன்னுடைய தரப்பு நியாயம் மற்றும் தன்னிடம் உள்ள ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்திருப்பதாகவும் விசாரணையின் முடிவில் தான் குற்றமற்றவன் என்பது தெரிய வரும் என்றும் அவர் விளக்கியுள்ளார். மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மீடியா நண்பர்கள் இந்த பிரச்சனையை கவனத்துடன் கையாளுமாறும் நவீன் கேட்டுக்கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout