"நவரசா" ஆந்தாலஜி....! சுவாரசியமான தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நவரசங்களை வைத்து, 9 இயக்குனர்கள் இயக்கி வரும் ஆந்தாலஜி பெயர்தான் நவரசா. கொரோனா காரணமாக தமிழ்திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. திரையுலகினருக்கு நிதியுதவி செய்யும் நோக்கில், உருவாக்கப்பட்டு வருகிறது இந்த வெப்தொடர். இந்த இணையத்தொடரை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த ஆந்தாலஜியில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் குறும்படங்களின் தலைப்பு குறித்த சுவாரசியங்களை, இத்தொகுப்பில் பார்க்கலாம்.
காதல்:
காதலை மையக்கருத்தாக வைத்து, உருவாகியுள்ள குறும்படம் தான் கிட்டார் கம்பி மேலே நின்று. இதில் சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.
ஆச்சரியம்:
இளம் இயக்குனரான கார்த்திக் நரேன், ஆச்சரியத்தை மையக்கருத்தாக வைத்து, 'பிராஜக்ட் அக்னி' என்ற தலைப்புள்ள குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
கருணை :
பிஜாய் நம்பியார் இயக்கும் குறும்படத்திற்கு ‘எதிரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கும் இப்படம், கருணையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கோபம்:
அரவிந்த்சாமி இயக்கியுள்ள குறும்படத்திற்கு, 'ரெளத்திரம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் போன்ற நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
அமைதி:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும், குறும்படத்துக்கு 'பீஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் போன்ற நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
நகைச்சுவை:
நகைச்சுவையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கியுள்ள குறும்படம் தான் 'சம்மர் ஆப் 92'. பிரியதர்ஷன் இயக்க, யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு போன்றவர்கள் இதில் நடித்துள்ளார்கள்.
தைரியம்:
சர்ஜுன் இயக்கும் குறும்படம் தைரியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 'துணிந்த பின்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பயம்:
பயத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் தான் 'இன்மை'. ரதீந்திரன் பிரசாத் இயக்க, சித்தார்த், பார்வதி போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
அருவருப்பு:
வஸந்த் சாய் இயக்கம் குறும்படத்திற்கு 'பாயசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருவருப்பை மையக்கருத்தாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் நடிகர்கள் பட்டியல் மற்றும் டைட்டில் வெளியானதும் ரசிகர்கள் இந்த ஆந்தாலஜியை காண ஆர்வமுடன் உள்ளனர். இந்த வெப்தொடரில் நடித்துள்ள சூர்யா, அதர்வா, அரவிந்த்சாமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments