உலகின் மிக உயரமான கட்டிடத்தில் 'நவரசா' விளம்பரம்!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் மற்றும் 9 ஹீரோக்கள் நடிக்கும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து மிகப்பெரிய அளவில் இந்த ஆந்தாலஜி படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அவற்றில் ஒன்று துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபாவில் நேற்று இரவு முதல் ‘நவரசா’ படத்தின் விளம்பரம் மின்விளக்குகளால் ஒளிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்கள் வைரலாகி வருகிறது என்பதே இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்

‘நவரசா’ திரைப்படத்தில் ஒன்பது பகுதிகள் இருந்தாலும் அதில் சூர்யாவின் பகுதி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் பிரயாகா மார்டின் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள பகுதிக்கு ’கிட்டார் கம்பி மேல் நின்று’ என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இசை பிரியரான சூர்யாவை ஒரு பெண் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இந்த பகுதியின் கதை என்று கூறப்படுகிறது. அதேபோல் விஜய்சேதுபதி பகுதியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், பாபி சிம்ஹா, அதர்வா, பிரசன்னா, கெளதம் மேனன், யோகி பாபு, பார்வதி, அஞ்சலி, அதிதி பாலன், ரேவதி, ரித்விகா, ரம்யா நம்பீசன், டெல்லி கணேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவரசா’வின் ஒன்பது பகுதிகளை பிரியதர்ஷன், வசந்த், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜி படத்தின் விமர்சனத்தை இன்னும் சிலமணி நேரங்களில் பார்ப்போம்.