அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன் கார்த்திக்.. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Saturday,February 04 2023]
தமிழ் திரை உலகில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கார்த்திக், அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் முத்துராமன். இவரது மகன் கார்த்திக் நவரச நாயகனாக திரையுலகில் வலம் வந்தார். பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்திக், அதன் பிறகு அதன் பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் என்பதும் ’வருஷம் 16’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கூட அவர் ’அந்தகன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நவரச நாயகன் கார்த்திக் கடந்த 1988 ஆம் ஆண்டு ’சோலைக்குயில்’ என்ற திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கௌதம் கார்த்திக் மற்றும் கயான் கார்த்திக் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் இவர்களில் கௌதம் கார்த்திக் தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகினியை திருமணம் செய்த நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை கடந்த 1992 ஆம் ஆண்டு கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் திருமணம் மற்றும் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.