நவரசா: கார்த்திக் நரேனின் 'அக்னி'

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒரு பகுதி அக்னி. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய்சித்தார்த் மற்றும் பூர்ணா நடிப்பில் ரான் எதான் யோஹன் இசையில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கார்த்திக் நரேன் ஒரு விஞ்ஞானபூர்வமான கதையை ஒரு குறும்படமாக தந்துள்ளார். விஞ்ஞானி அரவிந்த்சாமி ஆபத்தான ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்த நிலையில் அவற்றை நிரூபிக்க இஸ்ரோவில் இருந்து தனது நண்பர் பிரசன்னாவை அழைப்பதில் இருந்து கதை தொடங்குகிறது

இந்த இருவருக்கும் இடையே உள்ள அறிவியல் உரையாடல் மற்றும் வியக்கத்தக்க விஞ்ஞான ஆச்சரியங்கள் ஆங்காங்கே தெரிகிறது. அரவிந்த்சாமியின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார் என்பதும், அவரது நடிப்பும் கேரக்டரும் ஒரு மர்மமாகவே காட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நரேனின் ’துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் வருவது போன்றே கிளைமாக்சில் ஒரு எதிர்பாராத டுவிஸ்ட் என்பது மட்டுமே கார்த்திக் நரேன் திறமையாக தெரிகிறது. மேலும் ஆங்காங்கே சில ஹாலிவுட் படங்களையும் ஞாபகப்படுத்துகிறது.

2 கேரக்டர்கள், ஒரே லொகேஷனில் 30 நிமிட குறும்படத்தில் 25 நிமிடங்கள் பேசுகிறார்கள். மேலும் கேரக்டர்களின் பெயர்கள் விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி என்று வைத்ததன் குறியீடுகளையும் புரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் சயின்ஸ் பிக்சன் கதையில் ஒரு அருமையான டுவிஸ்ட் உடன் கூடிய கிளைமாக்ஸ் திருப்பத்தை ரசிக்கலாம்.
 

More News

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா....!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வெள்ளிப் பதக்கத்தை மறுத்து கண்ணீர்விட்ட ஒலிம்பிக் வீரர்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் வீரர் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில்

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணி....புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது....!

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும், புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் துவங்கியுள்ளது

நவரசா: வசந்தின் 'பாயாசம்' அதகளப்படுத்திய டெல்லி கணேஷ்

நவரசம் ஆந்தாலஜி தொடரின் இன்னொரு பகுதி 'பாயாசம்'. டெல்லி கணேஷ், ரோஹினி, உள்பட ஒருசிலர் நடித்துள்ள இந்த தொடரை இயக்குனர் வசந்த் இயக்கியுள்ளார்.

நவரசா: சூர்யாவின் 'கிட்டார் கம்பி மேல் நின்று' விமர்சனம் கெளதம் மேனனின் காதல் கவிதை

இசை அமைப்பாளரான சூர்யாவுக்கு லண்டன் சென்று இசையில் மிகப் பெரிய இசை மேதை ஆக வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவருடைய தாயார் அவருடன் வர மறுப்பதை அடுத்து