இயற்கை கற்றுத்தரும் பாடம் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாதாரண குடிமகனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய விவிஐபியாக இருந்தாலும் இயற்கை முன் அனைவரும் சமம் என்பதும், இயற்கையின் கோரத்தாண்டவத்தால் கோடீஸ்வரர்கள் கூட அடுத்த நிமிடமே குப்பை மேட்டிற்கு சென்ற வரலாறும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
இந்த நிலையில் உலகின் மிக உயர்ந்த காரில் பவனி வந்தவர் நடிகர் பிருத்திவிராஜின் தாயாரும் நடிகையுமான மல்லிகா என்பவர், சமீபத்தில் ஏற்பட்ட கேரள வெள்ளத்தில் சிக்கினார். அவரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் மீட்புக்குழுவினர் ஒரு அண்டாவில் அவரை உட்கார வைத்து வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினர். தனது விலையுயர்ந்த கார் சாலையில் செல்லும் அளவுக்கு தரமான சாலை அமைத்து தரவேண்டும் என்று மனு கொடுத்த மல்லிகா அவர்களுக்கு இன்று இயற்கை கற்று கொடுத்த பாடம் புரிந்திருக்கும்
இதேபோல் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோதும் பல கோடீஸ்வர்கள் அடுத்த வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் இருந்தனர் என்பதும் சென்னையின் மிகப்பெரிய விவிஐபி ஒருவர் வெள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள படகில் வெறும் லுங்கியுடன் பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com