இயற்கை கற்றுத்தரும் பாடம் இதுதான்

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

சாதாரண குடிமகனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய விவிஐபியாக இருந்தாலும் இயற்கை முன் அனைவரும் சமம் என்பதும், இயற்கையின் கோரத்தாண்டவத்தால் கோடீஸ்வரர்கள் கூட அடுத்த நிமிடமே குப்பை மேட்டிற்கு சென்ற வரலாறும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

இந்த நிலையில் உலகின் மிக உயர்ந்த காரில் பவனி வந்தவர் நடிகர் பிருத்திவிராஜின் தாயாரும் நடிகையுமான மல்லிகா என்பவர், சமீபத்தில் ஏற்பட்ட கேரள வெள்ளத்தில் சிக்கினார். அவரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் மீட்புக்குழுவினர் ஒரு அண்டாவில் அவரை உட்கார வைத்து வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினர். தனது விலையுயர்ந்த கார் சாலையில் செல்லும் அளவுக்கு தரமான சாலை அமைத்து தரவேண்டும் என்று மனு கொடுத்த மல்லிகா அவர்களுக்கு இன்று இயற்கை கற்று கொடுத்த பாடம் புரிந்திருக்கும்

இதேபோல் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோதும் பல கோடீஸ்வர்கள் அடுத்த வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் இருந்தனர் என்பதும் சென்னையின் மிகப்பெரிய விவிஐபி ஒருவர் வெள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள படகில் வெறும் லுங்கியுடன் பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக முதல்வர் கிரிஜா மேடமா? கருணாகரன் டுவீட்டால் பரபரப்பு

தமிழக முதல்வர் கிரிஜா மேடம் என்று காமெடி நடிகர் கருணாகரன் பதிவு செய்த டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படவிழாவில் மூன்று பிரபலங்கள்

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு திரைப்படமான 'கனா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த

அறியாமையா? அகந்தையா? நடிகர் சங்கத்திற்கு எஸ்.வி.சேகர் கேள்வி

நடிகர் சங்கத்தின்  65வது ஆண்டு பொதுகுழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தனர்.

சிரிச்சு சிரிச்சு என்ஜாய் பண்ணினேன். நெல்சனுக்கு வந்த சர்ப்ரைஸ் அழைப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள்

என்னா அடி....மும்தாஜின் மேல் இவ்வளவு கோபமா ஐஸ்வர்யாவுக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்படும் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் வீடியோவில் நாமினேஷன் படலம் குறித்த காட்சிகள் இருந்தன