நான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா, சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பீட்டர் பால் முதல் மனைவி அளித்து வரும் பேட்டிகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது.

இது குறித்து பீட்டர் பால் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளார் என்பதும் இந்த புகார் குறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் சர்ச்சைக்குரிய திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் வனிதா விஜயகுமார் தன்னுடைய பதிலடியையும் தெரிவித்து வருகிறார். அதேபோல் நெட்டிசன்கள் வனிதா திருமணம் குறித்து கூறும் கருத்துக்களுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வனிதா தனது டுவிட்டரில் கூறியபோது ’ஒரு தாயாக என் வாழ்க்கை மற்றும் திறனை பற்றி அக்கறை கொண்ட அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நான் இயற்கையிலேயே ஒரு பெண் சிங்கம். என் குழந்தைகளை கர்ஜித்து பாதுகாப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதாவின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களுடன் கூடிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.