இந்த நிமிஷம் அனுமதி கிடைத்தால் எல்லாத்தையும் விட்டுட்டு போயிடுவேன்: நட்டி நட்ராஜ்

  • IndiaGlitz, [Monday,June 20 2022]

இந்த நிமிஷம் அனுமதி கிடைத்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ராணுவத்தில் சேர சென்று விடுவேன் என்றும் தேசமே தெய்வம் என்றும் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி வருகிறது. வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்களில் தீ வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழில் அதிபர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் அக்னிபாத் திட்டத்தில் பணி முடிந்த வீரர்களுக்கு தங்களது நிறுவனத்தில் வேலை கொடுப்போம் என்றும் கூறி வருகின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த நிமிஷம் எனக்கு இராணுவத்தில் சேர அனுமதி கிடைத்தால் அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன் என்றும் தேசமே தெய்வம் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.