என்னை திட்டாதிங்கப்பா, அது வெறும் நடிப்பு தான்: நட்டி நட்ராஜ் ஆதங்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’கர்ணன்’. இந்த திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும், திரையுலக பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் இந்த படத்தை பாராட்டினார்கள்.
மேலும் இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது என்பதும் முதல் நாளில் இதுவரை இல்லாத அளவில் தனுஷின் திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து கேரக்டர்களிலும் நடித்த நட்சத்திரங்கள் நடிப்பில் அசத்தியிருந்தனர். குறிப்பாக தனுஷுக்கு எதிரான ஒரு கேரக்டரில் நடித்து இருந்த நட்டி நட்ராஜூக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அவரது நடிப்பு விமர்சகர்களை கவர்ந்த போதிலும் தனுஷ் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. தனுஷை அவர் கொடுமைப்படுத்தும் காட்சிகள் அதிகம் இருந்ததால் அவரை தனுஷ் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். ஒரு கட்டத்தில் அவருடைய செல்போனுக்கு திட்டி மெசேஜ் அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இது குறித்து நட்டி நட்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. phone messagela.. திட்டாதீங்கப்பா.. முடியிலப்பா.. அது வெறும் நடிப்புப்பா.. ரசிகர்களுக்கு எனது நன்றி!
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி...??????
— N.Nataraja Subramani (@natty_nataraj) April 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com