4 கதாநாயகிகள்...சைக்கோ திரில்லர் கதை....! படத்தில் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்....!

ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர், ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் தான் நட்டி என்கிற நடராஜ். இவர் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அந்தவகையில் தற்போது 4 கதாநாயகிகள் நடிக்கும், சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குனர் ஹாரூன் இப்படத்தை இயக்க, ட்ரீம் ஹவுஸ் சார்பாக வி.எம்.முனிவேலன் படத்தை தயாரிக்கிறார். கதாநாயகிகள் தேர்வு நடந்து வரும் சூழலில், முக்கிய கதாபாத்திரங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் நடிக்க தேர்வாகியுள்ளனர். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.