நட்டி நட்ராஜூக்கு ஓகே ஆன 'போங்கு'

  • IndiaGlitz, [Tuesday,November 22 2016]

சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் நடித்த 'போங்கு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் இன்று சென்சார் ஆனது
சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது. ஆக்சன் படமான 'போங்கு' திரைப்படம் சென்சார் விஷயத்தில் ஓகே ஆகியுள்ளதால் தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த படம் டிசம்பர் இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடி டிசம்பருக்குள் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்டி நட்ராஜ், ரூஹி சிங், பூஜா, அர்ஜூனன் நந்தகுமார், அதுல்குல்கர்னி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். தாஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

ரூ.2000 நோட்டு குறித்து வாட்ஸ் அப்பில் பரவும் பயங்கர வதந்தி

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். அதன்பின்னர் இந்தியாவில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது...

ஆசிய அளவில் 2வது இடத்தை பிடித்த ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த ஞாயிறு அன்று மும்பையில் பிரமாண்டமான...

காயம் அடைந்த ரயில் பயணிகளுக்கு கட்டுக்கட்டாக பணம் வழங்கிய மர்ம நபர்கள்

நேற்று முன் தினம் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதால் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள், கான்பூர்...

அடுத்தடுத்து திகில் பாதையில் செல்லும் நயன்தாரா

நயன்தாரா நடித்த முதல் திகில் படமான 'மாயா' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது...

சூர்யா-விக்னேஷ் சிவனின் முதல் முயற்சி வெற்றி

'எஸ் 3' படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாள் அன்று தொடங்கியது என்பதையும் பார்த்தோம்.