close
Choose your channels

ரஜினி வசனத்தில் நட்டி நட்ராஜின் அடுத்த பட டைட்டில்

Friday, January 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஒளிப்பதிவு இயக்குனர், நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்' படங்களை அடுத்து அவர் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'எங்கிட்ட மோதாதே, 'போங்கு' ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் நட்டி நட்ராஜின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 'கெட்ட பையன் சார் இவன்' என்பதுதான் நட்டியின் அடுத்த பட தலைப்பு. முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி பேசிய வசனமான 'கெட்ட பையன் சார் அவன்' என்ற வசனத்தின் பாதிப்பாக இந்த டைட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
'6 ஃபேஸ் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தீபக் இயக்கவுள்ளார். இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment