முன்னாள் உலக அழகியுடன் இணைந்து நடிக்கும் நட்டி நட்ராஜ்
Thursday, July 14, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
'சதுரங்கவேட்டை', 'கதம்கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜ் தற்போது 'போங்கு' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் என்ன என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
'சதுரங்க வேட்டை' படத்தில் ஹைடெக் ஆக பணத்தை அப்பாவிகளிடம் இருந்து ஏமாற்றும் கேரக்டரில் நடித்த நட்டி, இந்த படத்தில் ஹைடெக் ஆக கார் திருடும் கேரக்டரில் நடித்துள்ளார். நட்டியும் அவரது மூன்று நபர்களும் எதற்காக கார் திருடுகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விளக்குவதே 'போங்கு'வின் கதை என இயக்குனர் தாஜ் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் விலையுயர்ந்த ரோல்ஸ்ராய் கார் ஒன்றை பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த காரும் படத்தின் முக்கிய கேரக்டர் என்று கூறிய இயக்குனர், அகமதாபாத்தில் உள்ள ரோல்ஸ்ராய் கார் ஷோரூமில் ஒருசில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வான ரூஹி சிங் இந்த படத்தின் நாயகியாகவும், அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி,
சாம்ஸ் ஆகியோர் துணை நடிகர்களாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments