close
Choose your channels

நட்டி நட்ராஜின் 'போங்கு' டீசர்

Saturday, August 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய நட்டி என்ற நட்ராஜ் ஏற்கனவே 'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்', ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படமான 'போங்கு' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'போங்கு' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நட்டி நட்ராஜூடன் பாலிவுட் நடிகை ரூஹி சிங், அதுல் குல்கர்னி, ஷரத் லோஹித்ஷ்வா, ராம்தாஸ், ராஜன், அர்ஜூனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் தாஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா கம்போஸ் செய்துள்ள இந்த படத்தின் பாடல்களை தாமரை, கபிலன், மதன்கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். ஆர்டி இன்ஃபினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.