நட்டி நட்ராஜின் 'போங்கு' டீசர்

  • IndiaGlitz, [Saturday,August 20 2016]

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய நட்டி என்ற நட்ராஜ் ஏற்கனவே 'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்', ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படமான 'போங்கு' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'போங்கு' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நட்டி நட்ராஜூடன் பாலிவுட் நடிகை ரூஹி சிங், அதுல் குல்கர்னி, ஷரத் லோஹித்ஷ்வா, ராம்தாஸ், ராஜன், அர்ஜூனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் தாஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா கம்போஸ் செய்துள்ள இந்த படத்தின் பாடல்களை தாமரை, கபிலன், மதன்கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். ஆர்டி இன்ஃபினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

More News

'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது அனைவரும் அறிந்ததே...

விஜய்சேதுபதியின் தர்மதுரை முதல் நாள் வசூல் நிலவரம்

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி என ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி ...

உலக நாயகனின் உடல்நிலை குறித்த தகவல்

சமீபத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த உலக நாயகன் கமல்ஹாசன் ஒருசில வாரங்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர்...

ஜோக்கர்' படத்திற்கு சகாயம் ஐ.ஏ.எஸ். கொடுத்த விமர்சனம்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது...

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் மொத்த டீம் இதுதான்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றி படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பொன்ராம்-சிவகார்த்திகேயன் ...