'நட்டி'யின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'காலண்டர் கேர்ள்'
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நடராஜன் 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி அதன்பின்னர் 'கதம் கதம்' என்ற படத்திலும் நடித்தார். இந்நிலையில் அவர் தற்போது 'போங்கு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் தாஜ் இயக்கத்தில் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நட்டிக்கு ஜோடியாக ராய்லட்சுமியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர் .ஆனால் அவருக்கு திடீரென காலில் அடிபட்டதால் தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை ரூஹி'யை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் பாலிவுட்டில் 'காலண்டர் கேர்ள்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் ரூஹி கடந்த 2014ஆம் ஆண்டின் Miss Universal Peace and Humanity என்ற பட்டத்தை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மும்பையை சேர்ந்த பூஜா பிஷ்த் என்ற நடிகையும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கவுள்ளார். பரபரப்பான ரோட் டிரிப் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ரூஹி கார் கம்பெனியில் வேலை செய்பவராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments