close
Choose your channels

'நாட்டாமை' டீச்சர் நடிகை ராணியா இவர்? லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரத்குமார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’நாட்டாமை’ திரைப்படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் உருவான ’வில்லுப்பாட்டுக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் நடிகையாக ராணி அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அவர் நாயகியாக நடித்திருந்தாலும் அதன்பிறகு ’நாட்டாமை’ உள்பட பல படங்களில் கிளாமர் இடத்தில் நடித்தார். 'பதவிப்பிரமாணம்’ ’’நம்ம அண்ணாச்சி ’கர்ணா’ ’அந்த நாள்’ ’அவ்வை சண்முகி’ உட்பட பல திரைப்படங்களில் ராணி நடித்துள்ளார். குறிப்பாக விக்ரம் நடித்த ’ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு’ என்ற பாடலுக்கு விக்ரமுடன் சேர்ந்து ராணி நடனமாடி இருந்தார் என்பதும், இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் ராணி நடித்துள்ளார் என்பதும், . குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சீதாராமன்’ என்ற தொடரில் அவரது கேரக்டர் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இந்த நிலையில் நடிகை ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ’நாட்டாமை’ டீச்சர் ராணியா இவர்? என்று பலர் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment