ஒரு படத்தை ஓடவைக்க முடியாதவரெல்லாம் ரஜினியை விமர்சிக்கலாமா? பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

கோலிவுட் திரையுலகில் இருந்து கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்தபோது தோன்றாத எதிர்ப்பு ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு மட்டும் கிடைத்துள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி பாரதிராஜா, சீமான், கரு பழனியப்பன் உள்பட ஒருசில திரையுலகினர்களும் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு இயக்குனர் ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக தாக்கி பேசினார். ரஜினியை பற்றி பேசினால் மட்டுமே தலைப்பு செய்திகளில் வெளிவர முடியும் என்பதற்காகவே இவரை போல் ஒருசிலர் ரஜினியை குறி வைத்து விமர்சனம் செய்வதாக அந்த இயக்குனருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகரும் ஒளிப்பதைவாளருமாகிய நட்டி நட்ராஜ், அந்த இயக்குனருக்கு தனது டுவிட்டரில் பதிலடியை கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தன்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் அரவணைத்தது..அதுவே ஒரு துவக்கம் ...தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரைஅரங்கங்கள், அனுபவித்த வெற்றிகள் எண்ணிலடங்காதவை... இதை விட எத்துனையோ குழந்தைகளின் படிப்புக்கு உதவியவை..கிடைத்ததை அனைவருடன் பகிர்ந்தது..அது போதும்....

ஒரு படங்கூட ஓடாத... தன் தயாரிப்பாளர்களை கடன்காரன் ஆக்கிய கேடு கெட்டவன்லாம் பேசுவானாம்... யார் என்ன பண்ணனும்னு...இதில் இவன் ரசிகனாமா?...எப்படி தொங்கினாலும் வவ்வாலாக முடியாதுடீ..வர போக வண்டி குடுத்தாங்கல்ல...போ...

கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க... எத்தனை பேருக்கு பீஸ் கட்டி இருக்க ... எத்தன பேருக்கு சாப்பாடு போடறே.. பதக்குனு அத சொல்லு...நல்லவன் பேர் சொன்ன பதக்குங்குதா?... ஏன் ஆகாது... இயற்கை தானே.....

நட்டி நட்ராஜின் இந்த டுவீட்டுக்களுக்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.