'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தயாரிப்பாளரின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2019]

கவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் ஷிவா ஆனந்த் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'நட்புன்னா என்னன்னு தெரியுமா? திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இந்த ஆண்டின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளது. இந்த படம் ஒரு குடும்ப காமெடி படமாக இருக்கும் என்றும் இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.