ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

'மீசையை முறுக்கு' திரைப்படத்தை இயக்கி நடித்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்ததாக 'நட்பே துணை' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நட்புக்கு மரியாதை அளிக்கும் இந்த படத்தின் டிரைலர் எப்படி இருக்கிறது என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனெகா, கரு.பழனியப்பன், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஹரிஷ் உத்தமன், 'எருமைச்சாணி' புகழ் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில், அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.