'நட்பே துணை' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 26 2019]

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசையை முறுக்கு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்திருக்கும் அடுத்த படம் 'நட்பே துணை'. குஷ்புவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனேகா, கரு பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

ஆண் நண்பருடன் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

ஃபேஸ்புக் நட்பின் மூலம் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் நாசமான அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில்

பாஜக வேட்பாளராகும் கமல்-விஜயகாந்த் பட நாயகி!

கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி', தசாவதாரம்', 'விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மாத்திரை சாப்பிட்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதாரவிக்கு சமந்தா ஆலோசனை

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து நேற்று திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது

ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்று யாரும் பேசக்கூடாது: நயன்தாரா விவகாரம் குறித்து குஷ்பு

'கொலையுதிர்க்காலம்' சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்காத திரையுலகினர்களே இல்லை