அபாயத்தில் இருக்கும் உக்ரைனுக்கு “நேட்டா“ தன் படைகளை அனுப்பாதது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் நாட்டில் ஏற்கனவே ரஷ்யா தாக்குதலை துவங்கிவிட்ட நிலையில் நேட்டா அமைப்பு தனது படைகளை அந்நாட்டிற்குள் அனுப்பாது என அதன் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் உக்ரைன் முறைப்படி நேட்டா அமைப்பில் இன்னும் இணையாமல் இருக்கிறது. அதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எனப் பலரும் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தாலும் நேரடியாக தனது படைகளை நேட்டா அனுப்ப முடியவில்லை எனக் காரணம் கூறப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ராணுவ கூட்டமைப்புதான் நேட்டோ ஆகும். இதன் உறுப்பு நாடுகளுக்கு எதாவது பிரச்சனை என்றால் நேட்டோ உடனடியாக களத்தில் குதிக்கும். ஆனால் உக்ரைன் நேட்டாவில் இணைய விரும்பியது. இதை விரும்பாத ரஷ்யா அதன் மீது தற்போது போர்த்தொடுத்து இருக்கிறது.
இந்நிலையில் நேட்டோ அதன் படைகளை உக்ரைன் நாட்டுக்குள் அனுப்பவில்லை என்றாலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக அந்த நாட்டிற்கு உதவும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், கனடா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு அருகில் இருக்கும் இஸ்தோனியா, லாத்வியா, ருமேனியா, போலந்த் போன்ற நாடுகளில் தங்களது படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும் பெல்ஜியத்தில் இருக்கும் நேட்டா அமைப்பும் உக்ரைன் விவகாரத்தை உற்று கவனித்து வருவதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா ஒரு திட்டமிட்ட போரைத் துவங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரத்திற்கு முழுப்பொறுப்பும் ரஷ்யாவையே சேரும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குட்டரெஸ் ரஷ்யாவிற்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்து இருப்பதோடு அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout