சீரியஸ் ஆகும் சித்தார்த் சர்ச்சை டுவிட் விவகாரம்: வழக்குப்பதிவா?
- IndiaGlitz, [Monday,January 10 2022]
நடிகை சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்ற போது பாதுகாப்பு குறைபாடு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது என்றும் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பதிவு செய்திருந்தனர்
சாய்னா நேவலின் இந்த பதிவுக்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் செய்த பதிவில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவலை அவமானப்படுத்தும் வகையில் சித்தார்த்தின் டுவிட் இருப்பதாகவும், இதனால் அவர் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளது. இதனால் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
"COCK & BULL"
— Siddharth (@Actor_Siddharth) January 10, 2022
That's the reference. Reading otherwise is unfair and leading!
Nothing disrespectful was intended, said or insinuated. Period. ????