தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப்: சென்னை சாதனை 

  • IndiaGlitz, [Friday,April 08 2022]

குஜராத்தில் நடந்த தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகளில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா புலம் மாணவிகள் பாராட்டும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேசிய யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான இரண்டாவது சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன.

இதில் தமிழகம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் உட்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 169 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் ஐந்து பெண்களுடன் பங்கு பெற்ற தமிழக மகளிர் அணி இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி, ஒரு நான்காம் இடம் உள்ளிட்டவைகளைப் பெற்று தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

இதில் காயத்ரி, ரோகினி ஆகியோர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் யோகா புலம் இளம் கலை யோகா தெரப்பி மாணவிகள். மேலும் தமிழக அணி ஆர்டிஸ்டிக் குழு போட்டிகளிலும் காயத்ரி, ரோகினி இரண்டாமிடம் பெற்றனர்.     ஆர்டிஸ்டிக் ஜோடிகளுக்கான போட்டிகளிலும் காயத்ரியும், ரோகிணியும் நான்காம் இடம் பெற்றனர்.

தமிழக அணியின் பயிற்சியாளர் மற்றும் மேலாளராக முறையே மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா முனைவர் பட்ட ஆய்வாளர்களாகிய எழிலரசி மற்றும் கீதா ஆகியோர் அணியுடன் சென்றிருந்தனர். போட்டிகளின் நடுவராகவும் பணியாற்றினர். விஜயகுமாரி என்கின்ற ஆராய்ச்சி மாணவி பாண்டிச்சேரி அணியின் மேலாளராகப் பணியாற்றினார்.

போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேந்தர் ராதாகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கிருத்திகா மற்றும் யோகா புலம் தலைவர் பேராசிரியர் முனைவர் இளங்கோவன் ஆகியோர் வரவேற்று, வாழ்த்திப் பாராட்டு தெரிவித்தனர்.

More News

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்: பீஸ்ட்' 3வது சிங்கிள் பாடல்!

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டாகியுள்ளது.

கள நிலவரம்: சி.எஸ்.கே. - எஸ்.ஆர்.எச். மோதல் கம் பேக் கொடுக்கத் தயாராகும் ஜடேஜா

இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 17வது போட்டியில் நாளை மும்பையில் உள்ள டாக்டர் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட விமான பணிப்பெண்: என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அஜித் நடிக்கவிருக்கும் 61 வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலை செட் தயார் நிலையில் உள்ளது

சூர்யா அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்: இணையதளங்களில் வைரல்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான 'ஓ மை டாக்' என்ற படம் ஏப்ரல் 21ஆம் தேதி

'மணி ஹெய்ஸ்ட்', 'கூர்கா' படங்களின் காப்பியா  'பீஸ்ட்'? நெல்சன் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின்  டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ட்ரைலரை வைத்து, 'மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,