மலையாள நடிகை கடத்தல் விவகாரம்: கமல்ஹாசனுக்கு நோட்டீஸ்

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்து ஒரு அமைப்பு போலீஸ் புகார் கொடுத்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று முன் தினம் இரவு கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஒரு நிருபர் 'மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், 'நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் உள்ளேன்' என்று கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மலையாள நடிகையின் பெயரை பேட்டியின்போது பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு விளக்கம் கேட்டும் கமல்ஹாசனுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.