வைரமுத்து-சின்மயி விவகாரத்தில் தலையிடும் தேசிய பெண்கள் ஆணையம்

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

கவியரசர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட ஒருசில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகின்றனர். இன்னும் ஒருசில பெண்கள் விரைவில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து பேசவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் தேசிய பெண்கள் ஆணையம் விரைவில் தலையிடும் என தெரிகிறது. பாலியல் துன்புறுத்தல் குறித்து சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகார்கள் கண்காணிக்கப்படுவதாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், தேசிய பெண்கள் ஆணையத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் இன்னும் பல பிரபலங்களின் முகத்திரை கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.