கல்விக்கு ஊக்க கண் திறந்தது போல் இதையும் செய்யுங்கள்: விஜய்க்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நேற்று முன் தினம் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கினார் என்பதும் இந்த விழா 12 மணி நேரத்துக்கு மேல் நடந்த நிலையில் அவர் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தன் கையால் பரிசுகளை வழங்கினார் என்பதையும் பார்த்தோம்.
தளபதி விஜய்யின் இந்த முன்னெடுப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் விஜய்க்கு தங்களது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'
இளைய தளபதி
விஜய்
உங்களை வாழ்த்துகிறேன்.
தங்கள் நடிப்பில்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல்
தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின்
Content Based Realistic படங்களை தயாரித்து
சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'
— Seenu Ramasamy (@seenuramasamy) June 18, 2023
இளைய தளபதி @actorvijay
உங்களை வாழ்த்துகிறேன்.
தங்கள் நடிப்பில்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல்
தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின்
Content Based Realistic படங்களை
தயாரித்து
சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர… pic.twitter.com/GJRZovMIxV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments