சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த முன்னாள் பாஜக எம்பி

  • IndiaGlitz, [Saturday,July 20 2019]

சூர்யா நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும், தேசிய விருது பெற்றவரும், முன்னாள் எம்பியுமான பரேஷ் ராவல் என்பவர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் ஏர்லைன்ஸ் உரிமையாளராக நடிக்க இருப்பதாக தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பரேஷ் ராவல் சுமார் 6 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசசயில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது