'தளபதி 69' படத்தின் நாயகி இவரா?  சூர்யா படத்தில் தேசிய விருது வாங்கியவர் ஆச்சே..!

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

சூர்யா படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற நடிகை தான் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்தின் நாயகி என செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தின் திரைக்கதை எழுதும் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்ட எச் வினோத் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் முதல் கட்டமாக அவர் இந்த படத்தில் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யாவின் ’சூரரை போற்று’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் தற்போது கூட அவர் தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 69’ திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி இணையும் அறிவிப்பு மிக விரைவில் எதுவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக விஜய் படத்தில் நாயகிக்கு டூயட் பாடுவதை தவிர வேறு பெரிய வேலை இருக்காது. ஆனால் தேசிய விருது பெற்ற அபர்ணாவை எச் வினோத் நாயகியாக தேர்வு செய்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக நாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் தான் அவர் திரைக்கதை அமைத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அட்டகாசமான அஜித்தின் 3 தோற்றங்கள்.. 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி'படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இன்று மாலை 6.31 மணிக்கு இந்த படத்தின் முக்கிய

மேக்கப் இல்லை.. நகைகள் இல்லை.. இதுதான் உண்மையான நான்.. மேக்கப் இல்லாத டிடி..!

விஜய் டிவி பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இதில் 'லிப்ஸ்டிக் மற்றும் லென்ஸ் தவிர வேறு எந்த மேக்கப்பும் இல்லை

சிலம்ப சண்டை பயிற்சிக்கு பின் மாளவிகா செய்த வேலையை பாருங்க.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை மாளவிகா மோகனன் தனது தோழியுடன் இணைந்து சிலம்பு சண்டை பயிற்சி பெற்ற பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

இன்று 'கோட்' படப்பிடிப்பின் கடைசி நாள்.. நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த நடிகர்..

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும்

ஐஸ்லாந்தில் 'புஷ்பா 2' பாடலுக்கு ஆட்டம் போட்ட கமல்-ரஜினி பட நடிகை.. வைரல் வீடியோ..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை மீனா, ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அங்கு அவர் 'புஷ்பா 2' படத்தின் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட