'தளபதி 69' படத்தின் நாயகி இவரா?  சூர்யா படத்தில் தேசிய விருது வாங்கியவர் ஆச்சே..!

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

சூர்யா படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற நடிகை தான் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்தின் நாயகி என செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தின் திரைக்கதை எழுதும் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்ட எச் வினோத் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் முதல் கட்டமாக அவர் இந்த படத்தில் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யாவின் ’சூரரை போற்று’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் தற்போது கூட அவர் தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 69’ திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி இணையும் அறிவிப்பு மிக விரைவில் எதுவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக விஜய் படத்தில் நாயகிக்கு டூயட் பாடுவதை தவிர வேறு பெரிய வேலை இருக்காது. ஆனால் தேசிய விருது பெற்ற அபர்ணாவை எச் வினோத் நாயகியாக தேர்வு செய்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக நாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் தான் அவர் திரைக்கதை அமைத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.