தேசிய விருது பெற்ற பாலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தால் திரையுலகில் மிகச் சிறந்த நடிகராக மாறி விடலாம் என ஒரு காலத்தில் நடிகர்கள் நடிகைகள் தவம் இருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் பாலா.
பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்தால் தான் ஒரு நடிகரின் திரையுலக பயணம் முழுமை பெறும் என்று கூறும் அளவுக்கு அவரது படங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்டவை போல் இருக்கும்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலா, 1999ஆம் ஆண்டு ’சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
அதன் பிறகு சூர்யா நடித்த ’நந்தா’ திரைப்படத்தை இயக்கிய பாலா, விக்ரம் நடித்த பிதாமகன் என்ற படத்தையும் இயக்கினார். அதன்பிறகு பாலா இயக்கிய ’நான் கடவுள்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது என்பதும் இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’அவன் இவன்’ ’பரதேசி’ ஆகிய படங்களை இயக்கிய பாலா ’பிசாசு’ ’சண்டிவீரன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். பாலாவின் இயக்கத்தில் உருவான ’தாரை தப்பட்டை’ ’நாச்சியார்’ போன்ற படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் தற்போது அவர் இயக்கி வரும் சூர்யாவின் ’சூர்யா 41’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments