இனி யூடியூப், சமூக வலைதளங்களுக்கும் தேசிய விருது: மத்திய அரசு அதிரடி திட்டம்..!

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி சிறப்பான யூடியூப் மற்றும் சமூக வலைதள பதிவுகளுக்கும் தேசிய விருதுகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய திரைப்பட விருதுகள் போலவே யூடியூப், சமூக வலைதள படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய படைப்பாளர்கள் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்திய கலாச்சாரத்தை, வலிமையை விளம்பரப்படுத்தும் நபர்களுக்கும், வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட 20 பிரிவுகளில் இந்த விருதுகளை வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாட்டின் வலிமை, கலாச்சாரத்தை சர்வதேச அளவில் பரப்ப உதவுபவர்களுக்கு பசுமை சாம்பியன்கள், தூய்மை தூதர்கள், வேளாண் குறித்த ஆக்கபூர்வமான பதிவுகளை செய்பவர்கள் ஆகியவர்களுக்கு என மொத்தம் 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் மற்றும் பிரிவுகளில் திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்குவது போல் சமூக வலைதளங்களுக்கும் தேசிய விருது வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை சமூக வலைதள பயனாளிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.