பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டரின் தேசிய விருது அறிவிப்பில் திடீர் மாற்றம்..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஒரு பாடலுக்கான சிறப்பான நடன காட்சிகளை அமைத்ததாக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த விருது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக உள்ள ஜானி மாஸ்டர் மீது திடீரென ஒரு இளம் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த விருதை பெறுவதற்காக சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

ஆனால் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான விருது திரும்ப பெறப்படுவதாகவும், அவர் மீதான வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த விருது நிறுத்தப்பட்டு உள்ளதாக தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தேசிய விருது வழங்கும் விழாவிற்கு ஜாமீன் கிடைத்தும் ஜானி மாஸ்டர் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

 

More News

ஒரு முடிவில்லா மர்ம.. அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பை நாளை

அஜித் மகன் யாருக்கு ரசிகர் தெரியுமா? ஷாலினி பகிர்ந்த புகைப்படம்..!

நடிகர் அஜித்துக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் யாருக்கு ரசிகர் என்பது குறித்து ஷாலினி அஜித் தனது Instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

'கங்குவா' இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி இதுவா? ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று

'வேட்டையன்' ரிலீசுக்கு அடுத்த வாரமே ரிலீஸ் ஆகும் விமல் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் அடுத்த இரண்டு வாரத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில்லை என்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

'நான் மதம் மாற மாட்டேன்': சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 'தளபதி 69' நடிகை..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில், நான் எந்த காரணத்தை