பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டரின் தேசிய விருது அறிவிப்பில் திடீர் மாற்றம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஒரு பாடலுக்கான சிறப்பான நடன காட்சிகளை அமைத்ததாக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த விருது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக உள்ள ஜானி மாஸ்டர் மீது திடீரென ஒரு இளம் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த விருதை பெறுவதற்காக சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.
ஆனால் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான விருது திரும்ப பெறப்படுவதாகவும், அவர் மீதான வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த விருது நிறுத்தப்பட்டு உள்ளதாக தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தேசிய விருது வழங்கும் விழாவிற்கு ஜாமீன் கிடைத்தும் ஜானி மாஸ்டர் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com