புவி அறிவியல் துறைக்கான தேசிய விருது: சென்னை தேசியப் பெருங்கடல் இயக்குநர் சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் எம்.ஏ. ஆத்மநாபன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் தேர்ந்த விஞ்ஞானியாக அறியப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வானிலை, பருவமாற்றங்கள், பெருங்கடல் மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்து தகவல்களை அளித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு விருதுகளை அறிவித்து இருக்கிறது. இளம் விஞ்ஞானிகள், பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நிலவியல் துறையில் மிகச் சிறந்த பங்காற்றி வரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. விசாகப்பட்டிணம் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் வி.வி.எஸ்.சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான விருது வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் பாபுவுக்கும் வளிமண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தின் நிலவியல் துறையைச் சார்ந்த என்.வி. சலபதிராவுக்கு நில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருதும், பெண் விஞ்ஞானிக்கான அன்னா மானி ‘விருது, கோவா தேசிய பெருங்கடல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் லிடியா டி.எஸ். கண்டேபார்கருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout