விஜய் டிவி பிரபலம் இயக்கும் படத்தில் தேசிய விருது பெற்ற கலைஞர்!

விஜய் டிவி பிரபலம் இயக்கக்கூடிய திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி பிரபலம், யூடியூப் பிரபலம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பள்ளி மாணவர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இணைந்துள்ளார். இதுகுறித்து பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ரெமோ’ மற்றும் ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்களை அடுத்து ராஜ் மோகன் இயக்கும் திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறேன். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிசி ஸ்ரீராம் மீண்டும் ஒளிப்பதிவு செய்யும் தமிழ் படம் என்பதால் இந்த படம் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.