நதியாவுடன் 20 வயது மகள்: அக்கா தங்கச்சி போல இருக்காங்களே!

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

நடிகை நதியா தனது 20 வயது மகள் ஜனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பதிவு செய்துள்ள புகைப்படங்களுக்கு நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

கடந்த 1985ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை நதியா அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் முதன் முதலாக நடித்த தமிழ் நடிகை அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 80களின் கனவு நாயகியாக இருந்த நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர். இதனை அடுத்து மீண்டும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன நதியா தற்போது வரை சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது குடும்பத்தினர்களின் புகைப்படங்களை பதிவு செய்து ஆக்டிவ்வாக இருக்கும் நதியா இன்று தனது 20 வயது மகள் ஜனாவின் பிறந்தநாளை அடுத்து இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் தனது மகள் ஜனா சிறுவயதாக இருக்கும்போது உள்ள புகைப்படத்தையும் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் அம்மா-மகள் போலவே தெரியவில்லை என்றும், அக்கா தங்கச்சி போல் இருக்கின்றார்கள் என்று கூறி ஜனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.